Blog

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆகிவிட்டது. இனி எழுத போகிறேன். “Cine field and research” இது தான் அடுத்த தலைப்பு. கூடிய சீக்கிரம் வரும்..

Advertisements

Thermal conductivity of water at Mars

My friend Shyam (PhD batchmate, we used to attend the classes and write the exams together). One day we are moving to write the heat and mass transfer test. We were discussing about the topic while walking. Suddenly we had the doubt; what would be the thermal conductivity of water in the space. He said water boils at the moon. So the conductivity will be similar to earth.. If its so what would be the thermal conductivity in the Mars, Saturn — I asked.. This makes us to make a research proposal to find the thermal conductivity of water at mars..

Shy : Hey we will write a proposal and send it to the funding agency.
Me : First we try for funding from ISRO, if not works, then we will try for NASA..
Shy : Then what is the budget?
Me : We will put so many zeros in from of 1. And most of the money we can use only for traveling expense. First we should purchase a space shuttle.
Shy : Then first we have to purchase a land at the Mars, and we build a Bungalow. That one we can use as a research station.
Me : Then we supposed to take the project assistants, research associate. We will conduct the interview. But no Traveling allowance and dearness allowance is admissible.

After this we got a doubt. What is the use of this research. Who will bother about the thermal conductivity of water that is at mars.

As a researcher we got the solution too. (We got a enough experience to write stories to portrait our work). Soon we all settle at Mars. We need to cook. And we will start the schools, engineering colleges at there. The same heat transfer can be taught there. But for solving the problems we can’t use earth’s thermal conductivity value. This makes us to come up with this project..

பார்வை பார்த்தல்:

போன வாரம் (பொங்கலுக்கு முன்) என் காலில் (தொடையில்) ஒரு கட்டி வந்துவிட்டது. அதனுடனேயே ஊருக்கு போய்விட்டேன். கட்டி பெரிதானதைப் பார்த்ததும் எனக்கு இரண்டு ஆப்சன் இருந்தது. ஒன்று மருத்துவர் மீனாட்சியை பார்ப்பது (ஆம்பிள டாக்டர் தான்); இன்னொன்று நாட்டு வைத்தியம் பார்ப்பது (பார்வை பார்த்தல்). மீனாட்சி ஒரு முரட்டு வைத்தியர். அவர் வைத்தியமே ஒரு தினுசாக இருக்கும்.. எல்லா கேசுக்கும் ஒரு நரம்பில் ஊசி, குண்டியில் ஒரு ஊசி. அடுத்த கட்டம் குளுக்கோஸ் ஏற்றுவது. ஃபீஸ் என்னமோ நாப்பது தான். ஆனால் இந்த கட்டியை பார்த்தால் அல்லா சாப்டாப்புல இருக்கும் அவருக்கு.. எனக்கு வயித்தால போனபோது ஊசி குத்திய குந்தானியை நினைத்ததும் தொண்டையில் எழுந்த எச்சிலை விழுங்கி இரண்டாவது ஆப்சனை தேர்ந்தெடுத்தேன்.

பக்கத்து கிராமத்தில் தறி ஓட்டிக்கொண்டிருந்தவரிடம் கூட்டிப்போனார்கள். ஆஜானுபாகுவாக இருந்த அவர் என் கட்டியை பார்த்துக்கொண்டே ஏதோ மந்தரத்தை ஓதிக்கொண்டிருந்தார். பிறகு பச்சிலையை பறித்துக் கொடுத்து அரைத்து பூச சொன்னார். அவ்ளோதான். பச்சிலை போட்டது உள்ளே உள்ள சலம் எல்லாம் பிதுங்கிகொண்டு வரத்துவங்கியது. நானும் பிதுக்கி பிதுக்கி பீச்சிக்கொண்டிருந்தேன். இப்படியே நாள் போய்விட்டது. புண் குணமான வழியைக் காணும்.. சரின்னு கிளம்பி மைசூர் வந்துவிட்டேன். இங்க வந்து டாக்டர்ட்ட காட்டினா இன்னும் பழுக்கனும், பழுத்தும் பிதுக்களாம்னு சொல்லிவிட்டார்கள். பழுப்பதற்கு ஊப்பை வைத்து ஒத்தடம் தரளாம் (தந்தாச்சு); எள்ளை அரைத்து தயிரில் ஊற்றி கட்டி மேல் அப்பலாம் (இன்னைக்கு தான் அப்பி இருக்கேன்). என்னைக்கு பழுக்கிறது என்று பார்ப்போம்.

இப்ப நானே ஒரு வைத்தியன் ஆகிவிட்டதாக உணர்கிறேன். படிப்பதும் டுபாக்கூர் டாக்டருக்கு தானே. இந்த மாறி கேஸ் வந்தால் திறம்பட நானே வைத்தியம் பார்த்துவிடுவேன்.

தில்லி பயணம்

சென்ற வாரம் தில்லி செல்ல நேர்ந்தது. சென்ற ஆண்டும் இதே கடுங்குளிர் நேரத்தில் தான் சென்றேன். என்ன ஒரே வித்தியாசம், இந்த முறை கல்யாணம் முடிந்து விட்டது. சில சமயங்களில் திருமணம் நடந்தா இல்லையா என்று கூட தோன்றியது உண்டு.

ஒவ்வொரு ஆண்டும் கடுங்குளிர் நேரத்தில் தான் பயணித்துள்ளேன். இரவை ரயிலில் களிப்பது மிக மிக கொடுமையானது. நமது போர்வையை வைத்து நாக்கு கூட வளிக்கமுடியாது. பல ஆயிரம் ஊசி முனைகளை கொண்டு குத்துவது போல் இருக்கும். இப்படி தான் கல்யாணத்துக்கு முன் சதுரகிரி மலையில் ராத்திரி தங்கி பல ஆயிரம் ஊசி முனைகளின் குத்துக்களை பெற்றுக்கொண்டு வந்தேன். வீடு வந்து சேர்ந்ததும் காய்ச்சல் பிடித்துக்கொண்டது.

“Metro Rail” -ல் பயணம் செய்தேன். ஏரோபிளேன் கணக்கா எப்படி இருக்கிறது.. நம்ம ஊரில் பூச்சாண்டி கதையாக வருது வருது எங்கிறார்கள். Let us see..

நாள் ஒன்றுக்கு நான் குடித்த டீ-க்கு கணக்கு கிடையாது.. ஓரு பெண் எவ்வளவு அழகாக சிகிரெட் பிடித்துக்கொண்டு இருந்தால்.. நானே அசந்து விட்டேன்..

திரும்ப வரும் போது “Duronto Exp” -ல் பதிவு செய்து வருகிறேன். உள்ளே நுளைந்ததும் சைவமா, அசைவமா என்று கேட்டார்கள். இரண்டுக்கும் ஒரே ரேட் தான் என்று அசைவமே சொல்லிவிட்டேன். (அதுவுமில்லாமல், நான் சைவம் என்று பொது இடத்தில் சொல்லவே கூச்சமாக இருக்கிறது).
மொத்தம் நான்கு வேளை உணவு இந்த ரயிலில் தருவார்கள்.. சரி நானும் chicken, mutton வரும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். பார்தால் வெறும் முட்டை தான். காலை ரொம்ப கொடுமை. வெரும் ரொட்டியும் ஆம்லேட்டும்.. மற்றவர்களுக்கு (அதாவது சைவம் சொன்னவர்களுக்கு) உப்புமா, வடை, சாம்பார், சட்னி.. நேற்று ரயில் ஏறியதில் இருந்து அடுத்த நாள் இரவு வரை முட்டையாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்..

மடிக்கணிணியும், internet ம் நம் நேரத்தை குடித்து விடுகிறது. முன்பெல்லாம், அருகில் உள்ளவர்களிடம் பேசிக் கொண்டு வருவேன், இப்பொழுது அது மிஸ்ஸிங்.

Sherlock Homes

I started reading novel with Chetan’s “Two states”. Even I got the interest of reading the so many english pages by his novel. It was so nice. I used to run from my factory to read the remaining pages. Then I read Three mistakes of my life, followed by Revolution 2020. Even I bored with the Three mistakes of my life and didn’t continue it after the 200th page. Same for the R2020. At the mid of the novel, I could predict his end.

Chetan has the same writing style. Each chapter has that same word. I gotta chance to read “Kushwanth Singh’s” novel. It was almost like the third class platform tamil novel’s, but only the change is English..

Sherlock homes stores

Now any one can write a english novel. This generation like to read a novel having the base of Love and Sex. That’s how the novel “I too had a love story” succeeded. I didn’t like that novel, even I felt its almost waste of time.

 

Now I started choosing the good novel. Recently I read this Sherlock Homes . And attached the soft copy here. Read and enjoy.

Expand your knowledge..

நானும் தமிழன் தான்

முத்துகுமாரும், செங்கொடியும்
ஈழத்தமிழருக்காக உயிர்நீத்து
யேசுபிரானாவா போனார்..
பத்திரிக்கைகளுக்கும் சீமானுக்கும்
பழநெடுமாரனுக்கும்
தீனி கொடுத்தது தான் மிச்சம்;

முத்துக்குமார் மரித்த போது
முத்தமிழி அறிஞர் ஒரு
கையாலாகாத அறிக்கையும்
முதலைக் கண்ணீர் வடித்ததும் தான் மிச்சம்.
பிறகு எங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை
தந்து
திக்கு முக்காட வைத்து
வருடம் முழுதும் சனியன்று
வேலைநாள் ஆக்கி உயிர் எடுத்தார்..
அம்மா செல்வியை இந்த லிஸ்டில்
கூட சேர்க்க முடியாது.
ஒரு அறிக்கையில் கண்ணீர் வடிப்பார்,
மறு அறிக்கையில் போர் என்றால் மடிவது இயற்கை என்பார்..

பிரபாகரனே, இது எங்கள் பிரச்சனை,
இந்தியா தலையிட தேவையில்லை என்று அறிக்கை தந்தவர் தானே!!

கசாப்புக்கு
காஷ்மீர் வக்காலத்து வாங்கினால்
எப்படி இருக்குமோ
அப்படித்தான் நாம் பிரபாகரனுக்கு
பரிந்து பேசுவது இருக்கும்..

இப்படி எழுதுவதால் நான் ஈழனை வெறுப்பவன் அல்லன்
நானும் தமிழன் தான் நம் அரசியல்வாதியை போல..
உயிர் மரிப்பதல் எப்பலனும் எல்லை என்பதே என் கருத்து..
கம்யுனிசம் என்ன விலை என்று நல்லகண்ணுவே
கேட்கும் போது
உனக்கு மட்டும் என்ன வந்தது செங்கொடி..
செங்கோடியே கடைசியாக இருக்கட்டும்..
மரிப்பதனால் ஒரு பயனும் இல்லை என்று புரியட்டும்..

Never Smell Your Currency

ப்ளாக் எழுதியே பல நாட்கள் ஆகி விட்டது. இன்று காலை அமெரிக்கன் செமிக்கள் சொசைட்டி (American Chemical Society) -ல் ஒரு ஆராய்ச்சி கட்டுரை படித்த பொது கொஞ்சம் ஆச்சிரியமும், நிறைய பயமும் இருந்தது.. அதை தான் இங்கு எழுத போகிறேன்..
Bisphenol A என்னும் வேதி பொருளை பற்றி அந்த கட்டுரை நீண்டது.. Bisphenol A என்னும் வேதி நச்சுப்பொருள் நாம் உபயோக படுத்தும் பலபொருட்களில் இருக்கிறது. இதை plastic தயாரிப்பதற்கு மூலப்பொருளாக உபயோகிரார்கள். எண்பதுகளில் ஒரு மில்லியன் டன், 2009 -ல் சுமார் இரண்டரை மில்லியன் டன் பயன் பட்டிருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.
இதை முக்கியமாக ருபாய் தாளிலும், நாம் பயன்படுத்தும் தாளிலும் இருக்கிறதாம். பேப்பர் தீ பற்றி எரியும் பொது, பேப்பர் surface கருநிறமாகவும், சிகப்பு நிறமாகவும் வருவதற்கு இந்த Bisphenol A வேதி பொருள் தான் காரணம். உடல் பருமம், நரம்பு சம்பந்தமான நோய்கள், புற்று நோய் வர வாய்ப்புள்ளதாக அறிவியல் சொல்கிறது.. கனடா Bispehnol A -வை நச்சு பொருளாக அறிவித்து விட்டது. ஐரோப்பா நாடுகள் மற்றும் கனடாவில் இந்த வேதி பொருளை குழந்தைகள் பயன்படுத்தும் பாட்டில்களின் மூல பொருளாக பயன் படுத்துவதை கண்டித்துள்ளது..

சமீபத்திய ஆராய்ச்சி முடிவில், உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் இந்த வேதிப்பொருள், ருபாய் தாளில் அச்சடிக்கும் பொது பயன்படுத்தவதாக கண்டறிந்துள்ளது. சுமார் இருபது நாடுகளின் ருபாய் நோட்டுகளில் எவ்வளவு உள்ளது என்று கணக்கிட்டுள்ளார்கள்.
அந்த ஆராய்ச்சி கட்டுரை இத்துடன் இணைத்துள்ளேன்..

மேலே உள்ள படத்தில் அந்தந்த நாட்டு ரூபாய்களில் உள்ள வேதி பொருளின் அளவுகள் குறிப்பிட்டுள்ளது. துர்க்கியில் சிறுது கூட இல்லை, அதிக அளவில் Brazil, Czech Republic பதிவாகி உள்ளது..
என் பால்ய பருவத்தில் இருந்தே ஒரு பழக்கம் உள்ளது. புது புத்தகம் வாங்கினாலும், மடிப்பு இல்லா ருபாய் தாள் கையில் கிடைத்தாலும் அதன் வாசனையில் சிறிது நேரம் லயித்திருப்பேன்.. இனி….
"ரூபாவை முகரலாம்; ரூவாவை முகராதீர்"..

எழுதி பல நாட்கள் ஆனதால், சிந்தனை ஓடவில்லை.. தரம் குறைவதாக உணர்கிறேன்..

Paper currencies.pdf

மைசூர்

கடந்த நான்கு மாதங்களாக இங்கு தான் வாசம்.
ஊர் நன்றாக இருக்கிறது. மொழி தான் ஒண்ணும் புரிபடல.
கதிரவன் தமிழகத்தை மட்டும் தான் சுட்டரிக்கிறான்.
இங்கு வெறும் வெளிச்சம் மட்டும் தான்..
பின்னிரவு பொழுதுகளில் குளிரோ குளிர்!!

புனே-வில் இருந்த பொழுது, மூன்று மாதங்களில் இந்தி சரளமாக வந்தது, மாரதி புரிய ஆரம்பித்தது. இங்கு நான்கு மாதங்கள் ஆகி விட்டது. எனக்கு தெரிந்த கன்னட வார்த்தைகளை, town பஸ் டிக்கெட் பின்னால் எழுதி விடலாம். அவ்வளவுதான். "சொல்ப சொல்ப (கொஞ்சம் கொஞ்சம்), ஒந்து, இரடு (ஒன்னு, ரெண்டு), கொடிரீ (கொடுங்க), கோதில்ல (தெரியாது), பன்றி (வாங்க)", இவ்வளவு தான் என் கன்னட அறிவு. இதை வைத்து தான் ஓட்டிகிட்டு இருக்கேன். பெரும் பகுதி மக்களுக்கு தமிழ் தெரிகிறது, பெங்களூரை போல் இல்லாமல், இங்கு மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.

சென்ற வாரம், சாமுண்டீஸ்வரி மலையில், மக்கா சோளம் விக்கும் பெண்ணிடம் சிரமப்பட்டு எனக்கு தெரிந்த கன்னட வாரத்தைகளை போட்டு பேசிக்கொண்டிருந்தேன். அது கடைசியில், எனக்கு இந்தி கோதில்ல (இந்தி தெரியாது) என்று என்னை அவமானபடுத்தி விட்டது. நான் கஷ்டப்பட்டு கன்னடத்தில் பேசுகிறேன், நான் பேசுவது இந்தி என்று, எனக்கு பல்பு கொடுத்து விட்டது. (நல்ல வேல யாரும் இல்ல.)
காடுகளை அப்படி பாதுகாக்கிறார்கள். நாம் தான் எல்லாத்தையும் இழந்து விட்டோம் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சிறிய தோட்டம் உள்ளது. இங்கு வந்து எனக்கும் செடி வளர்க்க ஆசை வந்து விட்டது.